.இந்து இஸ்லாமியர் சமுக ஒற்றுமையை ஏற்படுத்தும் பூக்குழி திருவிழா
புளியங்குடி அசேன் ஹுசைன் தர்ஹாவில் நடைபெற்ற மொஹரம் பண்டிகையை ஒட்டி பூக்குழி திருவிழா நடைபெற்றது.
புளியங்குடியில் இந்து, இஸ்லாமியர்கள் சமூக ஒற்றுமையை ஏற்படுத்த நூறு வருடங்களுக்கு மேலாக தர்ஹாவில் பூக்குழி திருவிழா நடைபெற்று வருகிறது. பதினோரு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், கொடியேற்றத்துடன் முதல் நாள்விழா தொடங்கியது . பத்தாவது நாளான இன்று முன்தினம் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் பூக்குழி இறங்கும் பக்தர்கள் பத்து நாட்கள் கடும் விரதம் இருந்தனர் . பூக்குழி திருநாள் அன்று இஸ்லாமியகள் மட்டுமின்றி இந்துக்களும் விறகு,உப்பு ஆகியவற்றை நேர்த்தி கடனாக செலுத்தினார்கள் பூ இறங்கிய பின்னர் தீ கங்குகளை மூடிய பின்னர் அந்த இடத்தில ஒரு பானைக்குள் பானைகாரம் , அரிசி ரொட்டிகளையும் வைத்து புதைத்து விடுகின்றனர்.அதனை அடுத்தஆண்டு எடுத்து குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் உட்கொண்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.இதனை எராளமான இந்துக்களும் வாங்கி செல்கினறனர். இந்த விழாவை பால்ராவுத்தர் வகையறா ஐந்து தலைமுறையாக நடத்தி வருகின்றனர்.தற்போது நாகூர்மைதீன், தீவான்மைதீன், உசேன்ராவுத்தர், அசன்மதுசூதனன்,, காதர்மைதீன், மைதீன்பிச்சை, செட்டியார் வகையறா ஆகியோர் நடத்தி வருகின்றனர். மொகரம் திருவிழாவையொட்டி நடந்த குதிரை ஊர்வலம், கொடி ஊர்வலம், சந்தனக்காப்பு ஊர்வலத்தை காண புளியங்குடி மட்டுமின்று சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இவ்விழா முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிகின்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை புளியங்குடி டிஎஸ்பி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், வாசுதேவநல்லூர் தீ அணைப்பு அதிகாரி சேக் அப்துல்லா ஆகியோரது தலைமையில் போலீசாரும் ,தீ அணைப்பு வீரர்களும் செய்து இருந்தனர்.
Tags :