ரயில்வே துறையை மறந்ததா மத்திய அரசு எதிர்கட்சிகள் கேள்வி

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான ஒரு அறிவிப்பு கூட இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு தொடங்கி நடப்பு ஆண்டில் நாடு முழுவதும் அதிக அளவில் ரயில் விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இது குறித்து ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ரயில்வே பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. ரயில்வே துறையை மறந்ததா மத்திய அரசு? என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Tags :