ஜல்லிக்கட்டுபோட்டி- புதுக்கோட்டை தச்சன் குறிச்சியில் ஜனவரி 6 ஆம் தேதி போட்டி

by Admin / 02-01-2025 11:20:37am
 ஜல்லிக்கட்டுபோட்டி- புதுக்கோட்டை தச்சன் குறிச்சியில் ஜனவரி 6 ஆம் தேதி போட்டி

தமிழரின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்படும் வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டு 2025 போட்டிகளுக்கான நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி மதுரை அலங்காநல்லூர் அவனியாபுரம் பாலமேடு மற்றும் புதுக்கோட்டை சிவகங்கை போன்ற பகுதிகளில் இந்த ஜல்லிக்கட்டு பொங்கல் நேரத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் சத்திய பிரதாசாகு அனுப்பியுள்ளார். நிகழ்ச்சியை நடத்துவதற்கான திட்டங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் காளைகள் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் முழு நிகழ்வையும் காணொளி காட்சியில் பதிவு செய்தல் வேண்டும் என்றும் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருக்க வேண்டும் என்றும் விண்ணப்பிப்பதற்கு www.jallikattu.tn.gov.in,,என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம்.

புதுக்கோட்டை தச்சன் குறிச்சியில் ஜனவரி 6 ஆம் தேதி போட்டி தொடங்குகிறது. மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதியும் மதுரை பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதியும் மதுரை அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதி போட்டி நடைபெறுகிறது.

 

Tags :

Share via