மதுப்பட்டில் கொடுத்து மனசை மாற்றி காப்பற்றிய போலீசார்.

by Editor / 30-11-2022 09:01:38am
மதுப்பட்டில் கொடுத்து மனசை மாற்றி காப்பற்றிய போலீசார்.

 சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில்  வட மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்கின்ற இளைஞர் ஒருவர் நேற்று மதியம் பயணிகள் நடைபாதை பகுதியில் உள்ள கம்பியில் ஆபத்தான நிலையில் தொடர்ந்து மூன்று மணி நேரமாக  அமர்ந்தவாறு இருந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் இளைஞரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரிடம் தொடர்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.மேலும் இளைஞருக்கு மது பாட்டில் கொடுத்து சாதுரியமாக போலீசார் செயல்பட்டு அவனை பத்திரமாக மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

 ஆனால் அந்த இளைஞர் போலீசாரிடம் தான் மது பாட்டிலை எடுத்துக் கொள்கிறேன், இங்கு கூடிய கூட்டத்தை உடனடியாக அப்புறப்படுத்துங்கள் என கூறியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


மேலும் இளைஞர் கம்பியின் மேல் அமர்ந்தவாறு இருப்பதைக் கண்ட அப்பகுதியில் செல்லக்கூடிய மக்கள் அங்கு கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் இளைஞர் கீழே குதித்தால் அவரை பத்திரமாக மீட்பதற்காக தார்பாய்கள் கொண்டு ஈடுபட்டனர். இதில் ரயில்வே போலீசார் மற்றும் திருவொற்றியூர் சட்டம் ஒழுங்கு போலீசார் இளைஞரை சாதுரியமாக செயல்பட்டு இளைஞரை பத்திரமாக மீட்டனர். 
 

 

Tags :

Share via

More stories

Logo