கல்லூரி மாணவி கொலை

by Staff / 03-05-2023 01:28:48pm
 கல்லூரி மாணவி கொலை

கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சுஜய் (30). இவரது மனைவி ரேஷ்மா. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொள்ளாச்சி கோட்டாம்பட்டி கௌரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். ரேஷ்மா கர்ப்பிணியாக உள்ளதால் பிரசவத்திற்காக கேரளாவில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சுப்புலட்சுமி (20) என்ற கல்லூரி மாணவியை நேற்று வீட்டிற்கு சுஜய் அழைத்து வந்துள்ளார். சிறிது நேரத்தில் வீட்டில் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றபோது சுப்புலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரை கத்தியால் குத்தி   செய்துவிட்டு சுஜய் தலைமறைவாகினார்.

 

Tags :

Share via

More stories