இளநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வுவினாத்தாள் கசிந்ததின் காரணமாக ரத்து

by Admin / 12-05-2026 11:21:43pm
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வுவினாத்தாள் கசிந்ததின் காரணமாக ரத்து

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மே மூன்றாம் தேதி நடந்தது. வினாத்தாள் கசிந்ததின் காரணமாக எழுந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு தேசிய தேர்வு முகமை மற்றும் இந்திய அரசு இணைந்து ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்றும் இதற்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமே அறிவித்துள்ளது ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை இல்லை முந்தைய விண்ணப்ப விவரங்களை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு பெற்றுள்ளது. வினாத்தாள் பல்வேறு மாநிலங்களில் கசிந்துள்ளதாகவும் குறிப்பாக ராஜஸ்தானில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது உறுதி செய்யப்பட்டது அடுத்து தேர்வின் நம்பகத்தன்மையை காக்கும் பொருட்டு தேசிய தேர்வு முகமை மீண்டும் தேர்வு நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo