பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைத்த பத்திரப் பதிவுத் துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

by Staff / 30-06-2025 05:26:34pm
பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைத்த பத்திரப் பதிவுத் துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

  தஞ்சாவூரில் பெற்றோரை இழந்த பாண்டிமீனா என்ற பெண்ணுக்கு தந்தை ஸ்தானத்தில் முன்னின்று தனது சொந்த செலவில் திருமணம் நடத்தி வைத்த பத்திரப் பதிவுத் துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். பெற்றோர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழக்க, உதவி கேட்டு வந்த பாண்டிமீனாவுக்கு அன்றைய தஞ்சை ஆட்சியராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வீடு கட்டிக் கொடுத்து உதவியுள்ளார்.திருமணத்தையும் நடத்தி வைத்து சீர்வரிசை செய்தது பலரையும் நெகிழ வைத்துள்ளது.பெற்றோரை இழந்த பெண்ணுக்கு தந்தையாக இருந்து ஐஏஎஸ் அதிகாரி தன் சொந்த செலவில் திருமணத்தை நடத்தி வைத்தது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Deeds Registration Department IG Dinesh Ponraj Oliver conducted the marriage of a woman who had lost her parents

Share via