வைகாசி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மார்பில் கத்தி போடும் வினோத வழிபாடு -

by Admin / 24-05-2024 09:00:01am
 வைகாசி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மார்பில் கத்தி போடும் வினோத வழிபாடு -

 வைகாசி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வீர ஜடை அணிந்து மார்பில் கத்தி போடும் வினோத வழிபாடு - சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மார்பில் கத்தி போட்டு வான வேடிக்கையுடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்ட வானரமுட்டி கிராமத்தில் ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் வைகாசி மாத பொங்கல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்அதே போல் இந்த ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான வீர ஜடை அணிந்து கத்தி போடும் நிகழ்வு வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது..இந்நிகழ்வில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு வார காலம் அம்மனுக்கு விரதம் இருந்து தலையில் வீர ஜடை அணிந்து கத்தி போடும் விநோத வழி பாடு நிகழ்வானது இன்று  சிவன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வான வேடிக்கையுடன் தொடங்கி ஊரைச் சுற்றி வலம் வந்தனர்..

இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றது இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் என திராளானோர்  கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

 வைகாசி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மார்பில் கத்தி போடும் வினோத வழிபாடு -
 

Tags :

Share via