யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.குறட்டைவிட்டு தூங்கிய யானை. 

by Editor / 23-05-2024 10:39:31pm
யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.குறட்டைவிட்டு தூங்கிய யானை. 

நெல்லை வன உயிரின சரணாலயத்தின் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவுப்படி ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று ஆரம்பமாகியது... யானைகள் கணக்கெடுப்பிற்கான பயிற்சியினை கடந்த வாரம் குற்றாலம் வன ஓய்வு விடுதியில் வைத்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் நடைபெற்றது இதன் அடிப்படையில் இன்று யானைகள் கணக்கெடுப்பு குற்றாலம் வனச்சரகத்தில் 5 குழுக்கள், கடையநல்லூர்  வனச்சிறகத்தி 11 குழுக்கள், சங்கரன்கோவில் வனச்சரகத்தில் 11 குழுக்கள், சிவகிரி வனச்சரகத்தில் 8 குழுக்களாக மொத்தம் 35 குழுக்கள்,வனப்பணியாளர்கள், மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர், வனப்பகுதிக்குள் பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணியினை இன்று காலை மழையும் பொருட்படுத்தாமல் வனப் பகுதிக்கு சென்று கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர்,

 கடையநல்லூர் வனச்சரகத்தில் காலையில் வனப்பகுதிக்குள் செல்லும் பொழுது நன்றாக உணவு உண்டு ஆண் யானை ஒன்று குறட்டை விட்டு தூங்கியது. பின்னர் கண்காணிப்பு கோபுரம் சென்று யானைகள் நடமாட்டத்தை கண்காணித்த பொழுது மூன்று குட்டி யானைகள் உள்பட சுமார் பத்து யானைகள் வலுப்பகுதிக்குள் செல்வதை பார்த்தனர். யானைகள் வானத்தை விட்டு வெளியே வராதவாறு வனப்பகுதி உள்ளே அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து மேலும்  கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. பின்னர் நாளை நேர்கோட்டு பாதையில்  இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து யானைகளுக்குடையே லத்திகளை கணக்கெடுத்து கணக்கெடுக்கும் பணி மேற்கொள்வார்கள் நீர் இருந்த வரக்கூடிய முக்கியமான இடங்களில் இருந்து கொண்டு தண்ணீர் குடிக்க வரும் யானைகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பார்கள் கணக்கெடுப்பு விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட வன அலுவலர் பார்வைக்கு அனுப்பியதன் மூலம் வனச்சரகத்தில் பார்க்கப்பட்ட யானைகள் எண்ணிக்கை கணக்கெடுத்து மொத்தம் பார்க்கப்பட்டு யானைகளின் புகைப்படங்கள் தெரியவரும் என வனத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.குறட்டைவிட்டு தூங்கிய யானை 

Share via