முதலமைச்சர் ரங்கசாமியை தள்ளிவிட்ட பாதுகாப்பு அதிகாரி ஆயுதப்படைக்கு மாற்றம்

by Editor / 15-06-2022 04:08:19pm
முதலமைச்சர் ரங்கசாமியை தள்ளிவிட்ட பாதுகாப்பு அதிகாரி ஆயுதப்படைக்கு மாற்றம்

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் பகுதியில் உள்ள திருக்காமேஸ்வரர் கோயிலில் கடந்த 11ஆம் தேதியன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை இழுத்து வழிபட்டனர். 

முன்னதாக கூட்ட நெரிசலில்  உள்துறை அமைச்சரின் பாதுகாவலரான ராஜசேகர், முதலமைச்சர் ரங்கசாமியை தள்ளி விட்டார். இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு வவுச்சர் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனிடையே துணைநிலை ஆளுநர் உத்தரவின் அடிப்படையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியான உதவி ஆய்வாளர் ராஜசேகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories