சாலை விபத்தில் ஒருவர் பலி உறவினர்கள் சாலை மறியல்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியைச் சேர்ந்த சர்க்கரை முகமது ( 60). என்பவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள ஆற்றுப்பாலத்தில் சென்றார்.அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அறிந்த நாவினிப்பட்டி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விபத்து பற்றி அறிந்த மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சர்க்கரை முகமது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை விரிவாக்கப்பணி காரணமாக அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்
இதை போலீசார் ஏற்றுக் கொண்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்
Tags :