Thug Life படத்தின் தடையை எதிர்த்து மேல்முறையீடு

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்த தக் லைஃப் திரைப்படம் கடந்த ஜூன் 5ஆம் தேதி கர்நாடக மாநிலம் தவிர உலகம் முழுவதும் வெளியானது. கர்நாடகாவில் மட்டும் அப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தடையை எதிர்த்து கமல்ஹாசன் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு மனுவானது வரும் வெள்ளிக்கிழமை (ஜூன். 13) அன்று விசாரணைக்கு வர உள்ளது.
Tags :