அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் அமெரிக்க போரிலிருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாகஅதிபர் டொனால்ட் ட்ரம்ப் உரை
ஈரான் உடனான போர் அதன் இலக்குகளை எட்டி விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்நேற்று வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில் இது குறித்த தகவலை வெளியிட்டார். ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணை உற்பத்தி தளங்கள் அழிக்கப்பட்டு விட்டன என்றும் அமெரிக்காவின் முக்கிய இலக்குகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் அமெரிக்க போரிலிருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் இருப்பினும் இந்த காலகட்டத்தில் ஈரானை மீண்டும் கற்காலத்திற்க்கே கொண்டு செல்லும் வகையில் மிகக் கடுமையான தாக்குதல்களை அமெரிக்க நடத்தும் என்றும் அவர் எச்சரித்தார். ஈரான் மீண்டும் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியாத நிலையை உறுதி செய்த பின்னரே அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறும் என்றும் அவர் உறுதி பட தெளிவுபடுத்தினார் .போரை முடிவுக்கு கொண்டு வர ஈரானுடன் எந்த ஒரு முறையான ஒப்பந்தமும் செய்ய வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார். ஹார் முஸ் நீரிணை பாதுகாப்பை உறுதி செய்வது பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளின் பொறுப்பு என்றும் அமெரிக்கா இதில் தலையிடாது என்றும் அவர் தெளிவு படுத்தினார். அமெரிக்க அதிபரின் இந்த உரைக்கு பின்னர் கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் 15 டாலராக உயர்ந்துள்ளது.
Tags :



















