வடமாநில பெண்ணின் 4 மாத குழந்தைக்கு, பெண் காவலர் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடமாநில பெண்ணின் 4 மாத குழந்தைக்கு, பெண் காவலர் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தந்தை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தாய், இதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தம்பதியின் பிள்ளைகளை குழந்தைகள் நல மையத்திற்கு அழைத்து செல்ல வந்த பெண் போலீஸ் ஆர்யா ஷைலஜன், பசியால் துடித்த 4 மாத குழந்தைக்கு மடியில் அமரவைத்து பாலூட்டி பசியாற்றினார். மற்ற மூன்று பிள்ளைகளுக்கும் போலீசார் உணவு வாங்கிக் கொடுத்தனர்.
Tags : வடமாநில பெண்ணின் 4 மாத குழந்தைக்கு, பெண் காவலர் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.