தந்தை பெரியாரின் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த தினம் இன்று அனைத்து பகுதிகளும் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செய்தார்.இந்த நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம்,அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம் சித்ரா, நல்லதம்பி, மணி ,ஜெய்சங்கர் மற்றும் . நிர்வாகிகள் திரளாக கலந்து.. கொண்டனர்.
Tags : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி