விறுவிறுப்படையும் விருதுநகர் பாலியல் வழக்கு -சிபிசிஐடி போலீசார் தீவிரம்
விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த பல மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் விருதுநகர் சிபிசிஐடி காவல் நிலையத்திற்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இளம்பெண் பாலியல் வழக்கு தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.இந்த வழக்கில் கைதான 4 பேரையும் 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹரிஹரன் உறவினர்களிடம் சிபிசிஐடி போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொள்ள மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து குவிந்துள்ளனர். இந்த உள்ள நிலையில் விரைவில் குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : விருதுநகர் பாலியல் வழக்கு














.jpg)




