தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு தடம்மாறும் நெல்லை பொதுமக்கள்

by Editor / 30-11-2021 08:54:03pm
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு தடம்மாறும் நெல்லை பொதுமக்கள்

நெல்லை:நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மேலப்பாளையம் டவுன் வழியாக தாமிரபரணி ஆற்று பாலத்தை கடந்து செல்ல போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

நத்தம் தாம்போதி பாலத்தின் இரு கரைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,
இது தவிர நம்பியாறு, கொடுமுடியாறு, தென்காசி மாவட்டத்தில் இருக்கும் கடனா நதி ஆகியவற்றிலிருந்தும் அதிகளவு உபரிநீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, சீவலப்பேரி தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.
போக்குவரத்து துண்டிப்புஇதையடுத்து அந்த வழியாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதையடுத்து, சீவலப்பேரியில் இருந்து பாளையங்கோட்டை வழியாக திருநெல்வேலி மற்றும் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை பழையப்பேட்டை முதல் திருப்பணிகரிசல்குளம் வரை செல்லும் இணைப்பு சாலையில் வெள்ளம் ஏற்பட்டதில்  பெண் ஒருவர் அவரது மகனுடன் வெல்லத்தையும் பொருட்படுத்தாமல் தண்ணீரில் கஷ்டப்பட்டு சென்றதும் நடந்தேறியது. 

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு தடம்மாறும் நெல்லை பொதுமக்கள்
 

Tags :

Share via