சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து
சென்னை பாரிமுனை அர்மேனியன் தெரு அருகே உள்ள 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், இந்த விபத்து நடந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 8 ஊழியர்களின் நிலை என்ன ஆனது என்ற விவரம் தெரியவரவில்லை. மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது. இந்த கோர விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது,
Tags :