குற்றாலத்தில் தண்ணியில்லன்னா..அந்த பாறைமட்டுமே...
ஆண்டுத்தோறும் தென்மேற்குப்பருவமழை காரணமாக குற்றாலத்தில் ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்,ஆகிய 3மாதங்கள் சீசன் காலமாகும் இந்த காலக்கட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 80 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்துசெல்வது வழக்கம்,மேலும் குற்றாலத்தை பொறுத்தவரை 2 சீசன் உண்டு.1 தென்மேற்குப்பருவமழை காலமும்,மற்றொன்று சபரிமலை சீசன் காலம் நவம்பர் முதல் ஜனவரி வரையிலும் என 2 சீசன் காலம் உண்டு.இந்த 2காலகட்டத்திலும் சுமார் 1கோடி பேர் வந்து செல்லும் குற்றாலத்தில் கடந்த 2ஆண்டுகாலம் கொரோனோ பெருந்தொற்று காரணமாக சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.இந்த நிலையில் தற்போது சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் தென்காசி மாவட்ட மேற்குதொடர்ச்சிமலைப்பகுதிகளில் மலையில்லாத நிலை இருந்துவருகிறது. கடந்த சிலநாட்களாக மழையில்லா நிலை நீடித்துவருவதால் அருவிகளுக்கு வரும் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுகிறது.அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து இல்லாததால் குறைவாக கொட்டும் நீரில் சுற்றுலாப்பயணிகள் வேதனைகளோடு குளித்து சென்றவண்ணமுள்ளனர்.
Tags : There is no water in the court ... only that rock ...