பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி - சீமான் கண்டனம்

by Editor / 23-04-2025 01:15:10pm
பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி - சீமான் கண்டனம்

காஷ்மீரில் 25 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரநிகழ்வு பயங்கரவாதிகளின் கோழைத்தனம், பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வியை காட்டுகிறது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், இத்தனை ஆயிரம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தும், ராணுவ சீருடை அணிந்து பயங்கரவாதிகள் பொதுவெளியில் சுதந்திரமாக உலவக்கூடிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றால் இந்தியப் பாதுகாப்புத்துறையும், உளவுத்துத்துறையும் என்ன செய்து கொண்டிருந்தது? என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via