கணவனை கழுத்தை நெரித்துகொலை செய்தமனைவி12 வயது மகன்  கைது.

by Editor / 15-02-2025 10:44:17pm
கணவனை கழுத்தை நெரித்துகொலை செய்தமனைவி12 வயது மகன்  கைது.

தென்காசி மாவட்டம் தாலுகா கடையநல்லூர் அடுத்து சேந்தமரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த மரியா ஆரோக்கிய செல்வி வயது (30 )கடந்த 5 தேதி தன்னுடைய கணவர் முத்துக்குமார் மஞ்சகாமாலை நோயால் மயக்க அடைந்து விட்டார்  
எனக் கூறி 108 ஆம்புலன்ஸ் வரவழைத்துள்ளார் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் செவிலியர்கள் மயங்கி நடையில் இருந்த முத்துக்குமாரை பரிசோதனை செய்து பார்த்த பொழுது அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தகவலை தெரிவித்தனர் இருப்பினும் இவரின் இறப்பு சந்தேகம் என 108 ஆம்புலன்ஸ் இருந்த ஊழியர்கள் சேந்தமரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்

 சந்தேகத்தின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சேந்தமரம் போலீசார் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இறப்புக்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர் அதன் பின்னர் பிரேத பரிசோதனையில்  முத்துக்குமார் கழுத்து எலும்பு நெரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு மரியா ஆரோக்கிய செல்வியை விசாரிக்க காவல்துறை முடிவு செய்த நிலையில்   பிரேத பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பு மரியா ஆரோக்கிய செல்வி மருத்துவ பரிசோதனை அறிக்கையில் நிச்சயமாக கொலை என தெரிய வந்துவிடும் என பயந்து அதற்கு முன்பாக கிராம நிர்வாக அலுவலர் இடத்தில் சரன்அடைந்து நாங்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் ஆனால் எனது கணவர் வேலைக்குச் செல்லாமல் தினசரி குடித்துவிட்டு வந்து எனக்கும் எனது பிள்ளைகளுக்கும்  தொந்தரவும் தொல்லையும் கொடுத்துக் கொண்டிருந்தார் மேலும் பிள்ளைகளை  அடிப்பது என்னை அடிப்பது என தொடர்ந்து தொந்தரவு செய்ததால் கடந்த 5ம் தேதி எனது கணவர் முழுமையாக மது அறிந்து போதையில் படுத்து கிடந்த பொழுது நானும் எனது 12   மகனும் அப்பாவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு போதையில் தூங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தை நெரித்தேன் எனது மகன் தலகாணியை வைத்து மூஞ்சில் அமைக்கினான் அதில் அவர் மயங்கிவிட்டார் அதன் பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் மஞ்சள் காமாலையில் எனது கணவர் மயங்கிவிட்டார் எனக் கூறி நம்ப வைத்து 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வர செய்தேன் ஆம்புலன்ஸ் வந்தவர்கள் எனது கணவர் முத்துக்குமார் இறந்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது  என கூறிவிட்டு முத்துக்குமாரை வீட்டிலே போட்டுவிட்டு சென்று விட்டனர் அதன் பின்னர் சிறிது நேரத்தில் காவல் துறை எனது வீட்டுக்கு வந்து எனது கணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை என தெரிய வந்துவிடும் என்பதை தெரிந்து கொண்ட நான் தங்கள் முன்பு ஆஜராகி விடுகிறேன் என கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்புதல் வாக்குமூலம்  கொடுத்தார்.

அதன் பின்னர் கிராம நிர்வாக அலுவலரின் புகாரி  அடிப்படையில் கடையநல்லூர் சர்க்கிள் சேந்தமரம் இன்ஸ்பெக்டர் ஆடிவேல்  மரிய ஆரோக்கிய செல்வியை கைது செய்து விசாரணை செய்ததில் நானும் 12 வயது உடைய எனது மூத்த மகனும் கணவர் முத்துக்குமாரை கழுத்தை நிறுத்தி கொலை செய்தோம் என போலீசாரிடமும் வாக்குமூலம் கொடுத்ததின் அடிப்படையில் தாய் மகன் இருவரையும் கடையநல்லூர் சரக சேந்தமரம் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் சப் இன்ஸ்பெக்டர் தீபன் குமார் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர் மரியா ஆரோக்கிய செல்விக்கு ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை உள்ளது

 மனைவியே கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மஞ்சள் காமாலையால் இறந்து விட்டார் என நாடகமாடியது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

Tags : கணவனை கழுத்தை நெரித்துகொலை செய்தமனைவி12 வயது மகன்  கைது.

Share via