ஜெயலலிதா மறைவிற்கு அதிமுக 4 ஆக பிளவுபட்டுள்ளது-ஆர்.எஸ்.பாரதி.
புதுச்சேரியில் நடைபெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்நாள் விழா பொதுக்கூடத்தில் திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசியதாவது:
தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவிற்கு அதிமுக 4 ஆக பிளவுபட்டுள்ளது.ஆனால் கலைஞர் மறைவிற்கு பிறகும் திமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை அதற்கு காரணம் நம் தளபதி தான்.கடந்த காலங்களில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.2026 தேர்தலில் புதுச்சேரியில் நீங்கள் விரும்புவது நடக்கும் காரணம் இங்கு திமுக வலுவாக உள்ளது.புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 28 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெரும்.கூட்டணி தலைவர்களை தளபதி எப்படி மதிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் .இதனை தெரிந்து கொண்டு அனைவரும் பேச வேண்டும்.இல்லையென்றால் டெல்லியில் நடந்தது தான் இங்கும் நடக்கும்.திமுகவில் உள்ளவர்கள் சுயமரியாதை கொண்டவர்கள்.என்றார்.
Tags : ஜெயலலிதா மறைவிற்கு அதிமுக 4 ஆக பிளவுபட்டுள்ளது-ஆர்.எஸ்.பாரதி.



















