அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி புகழாரம்

by Staff / 15-10-2022 02:12:18pm
அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி புகழாரம்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில், "நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஒரு விஞ்ஞானியாகவும், சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் கவர்ந்த ஜனாதிபதியாகவும் நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பெரிதும் போற்றப்படுகிறார்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via