ஃபெரோஸ்பூரில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட ஆர்வம் காட்டும் முன்னாள் ஏடிஜிபி.
மக்களவை தேர்தல் நடைபெற்றுவரும் நேரத்தில் பஞ்சாபி மாநில காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய பிரமுகர்கள் இணைந்து வருவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் கூடுதல் டிஜிபி குரீந்தர் சிங் தில்லான் (செவ்வாய்க்கிழமை) இன்று காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார். சமீபத்தில் அவர் தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிலை உருவாகியுள்ளது. அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் அவர் ஃபெரோஸ்பூரில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட ஆர்வமாக உள்ளார்.
Tags : ஃபெரோஸ்பூரில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட ஆர்வம் காட்டும் முன்னாள் ஏடிஜிபி