காரில் மதுபானம் கடத்திய புதுச்சேரி வாலிபர் கைது

by Staff / 01-03-2023 01:02:14pm
காரில் மதுபானம் கடத்திய புதுச்சேரி வாலிபர் கைது

புதுச்சேரியில் இருந்து காரில் மதுபானம் கடத்துவதாக கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் சிவகுரு தலைமையில் போலீசார் பெரம்பை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த மகேந்திரா சைலோ காரை நிறுத்தினர். நிற்காமல் சென்ற காரை, போலீசார் துரத்திச் சென்று பிடித்து, சோதனை செய்தனர். அதில், 2, 880 குவாட்டர் மது பாட்டில்கள் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 1. 73 லட்சம். காரில் மதுபானம் கடத்திய புதுச்சேரியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சுகுமார், 32; என்பவரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo