ஆன்லைன் ரம்மியை தடை..? பரிந்துரை குழுவின் அறிக்கை முதலமைச்சரிடம் இன்று சமர்பிப்பு

by Editor / 27-06-2022 11:31:11am
ஆன்லைன் ரம்மியை தடை..? பரிந்துரை குழுவின் அறிக்கை முதலமைச்சரிடம் இன்று சமர்பிப்பு


இலவசமாக விளையாட ஆரம்பித்து இறுதியில் எமனாகிப்போகும் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் ஈர்க்கப்பட்டு விளையாடி, அதற்கு அடிமையாகி அதிக பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் நிகழும் தற்கொலைகள் அதிகரித்துள்து. இதனையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு, தற்கொலை ஆகிய ஆபத்துகளை கண்டறியவும், பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், அவற்றின் விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை கட்டுப்படுத்தவும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இக்குழு ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்க உள்ளனர். தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க சட்டம் இயற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags : Ban online rummy ..? The report of the nominating committee was submitted to the Chief Minister today

Share via