பிரியங்கா காந்திக்கும் உறுதியான கொரோனா

by Staff / 03-06-2022 04:36:03pm
பிரியங்கா காந்திக்கும் உறுதியான கொரோனா

 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் லேசான அறிகுறிகளே தென்படுவதாகவும் பதிவிட்டுள்ளார்.தொற்று பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து வீட்டை தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அனைத்து மருத்துவ நடைமுறைகளையும் முறையாக பின்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

 

Tags :

Share via