டி.என்.பி.எல். கிரிக்கெட்: 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி

by Staff / 03-06-2022 04:50:36pm
டி.என்.பி.எல். கிரிக்கெட்: 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 23-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை நெல்லை, சேலம், கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடக்கிறது. நெல்லையில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்சை சந்திக்கிறது.இதையொட்டி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி நேற்று நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘டி.என்.பி.எல். கிரிக்கெட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் 100 சதவீதம் முழுமையாக அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

 

Tags :

Share via