காமெடி நடிகர் ஐயப்பன் கோபி மரணம்

பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர், வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். ஆறு, காக்கி சட்டை, கருப்பன், சதுரங்க வேட்டை, என் ஆளோட செருப்பை காணோம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
காரைக்குடி அருகே உள்ள பள்ளத்துாரை சேர்ந்தவர் ஐயப்பன் கோபி. பாங்க் ஆப் மதுராவில் பணியாற்றிய இவர், நடிப்பு ஆசையால் அதை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தார். பாலசந்தர் 'ஜாதிமல்லி' படத்தில் இவரை அறிமுகப் படுத்தினார். தொடர்ந்து குணசித்திரம், நகைச்சுவை என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்தார். இந்த செய்தி இப்போது தான் தெரிய வந்திருக்கிறது. ஐயப்பன் கோபி மறைவை அடுத்து திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags :