தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

by Editor / 29-12-2021 08:27:55pm
தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

தமிழக கடற்கரையை நோக்கி நகரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை 30ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் வரும் 31ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருக்கிறது. அதேபோல் 2ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via
Logo