இருசக்கர வாகன பாதுகாப்பக பணியாளரை காவலர் தாக்கிய விவகாரம் காவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட எஸ்பி உத்தரவு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் காவலர் வினோத். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கும்பகோணத்தில் தனியார் இருசக்கர வாகன பாதுகாப்பகத்தில் வேலைசெய்யும் ஊழியரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் இது சம்பந்தமாக காவலர் வினோத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags :