ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மூதாட்டி ரயில் மோதி பலி

ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே வைவேஸ்புரத்தை சேர்ந்த காமக்காள் (65), என்பவர் அந்தப் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். தகவல் அறிந்த ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ். பி தனிப் பிரிவு காவலர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :