பிரபல நடிகரின் ஹோட்டல் மீது தாக்குதல்

பாலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும் தொகுப்பாளருமான கபில் சர்மா, சில நாட்களுக்கு முன்னதாக கனடாவில் புதிய ஹோட்டல் ஒன்றை திறந்தார். இந்நிலையில், நேற்று (ஜூலை 10) அவரது ஹோட்டல் மீது மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்றுள்ளார். மேலும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
Tags :