"தமிழ் ஆசிரியர்களே இல்லை” - கலாநிதி வீரசாமி எம்பி வருத்தம்

தமிழ்நாட்டில் உள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லாத நிலைமை வருத்தமளிப்பதாக, வடசென்னை எம்பி கலாநிதி வீரசாமி, நாடளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “86 ஹிந்தி மற்றும் 65 சமஸ்கிருத ஆசிரியர்கள் பதவியில் உள்ள நிலையில், தமிழ் ஆசிரியர்கள் நியமனம் இல்லாதது, மொழி சமத்துவத்தையும் மாணவர்களின் அடிப்படை உரிமைகளையும் பாதிக்காதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து, “நிரந்தர தமிழ் ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
Tags :