தி. மு. க. , - அ. தி. மு. க. , நிர்வாகிகள் கைது

by Staff / 05-08-2023 04:07:09pm
தி. மு. க. , - அ. தி. மு. க. , நிர்வாகிகள் கைது

விழுப்புரம் வானுார் அடுத்த தலைகாணிக்குப்பம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்ததில் கடந்த 2020ம் ஆண்டு சிவகங்கையைச் சேர்ந்த வினோத் என்பவர் செம்மண் குவாரியை குத்தகைக்கு எடுத்தார். அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் குவாரி உரிமையாளரிடம் கோவில் கட்டுவதற்கு பணம் கேட்டு குவாரி பணியை தடுத்து நிறுத்தினர். சமீபத்தில் செம்மண் குவாரி இடத்தில் வருவாய் துறையினர் நில அளவு பணியை மேற்கொண்டனர்.அப்போது, தி. மு. க. , கிளைச் செயலாளர் கோதண்டராமன், 45; அ. தி. மு. க. , கிளைச் செயலாளர் உமாபதி, 65; மற்றும் பழனி, 47; ஆனந்தன், 52; ஆகியோர் பணியை தடுத்து நிறுத்தினர். பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று 4 பேரையும் கைது செய்தனர். இதற்கிடையே குவாரியில் உரிமையாளர்கள் குவாரியில் பணியை மேற்கொண்ட போது, தலைகாணிக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். முற்றுகையிட்ட 42 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories