சாலை தடுப்பு சுவரில் மோதிய சரக்கு லாரி

by Staff / 18-03-2023 01:09:09pm
சாலை தடுப்பு சுவரில் மோதிய சரக்கு லாரி

சங்ககிரியில் இருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று நேற்று மீஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை நடுவே இருந்த தடுப்பு மீது மோதி நின்றது.இதில், லாரியின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்தது. தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிரேன் உதவியுடன்  விபத்தில் சிக்கிய லாரியை மீட்டனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில்,   லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால்,   விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால், போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாத காரணத்தால், சாலையில் தடுப்பு இருப்பது தெரியாததால் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories