பாம்புகள் குடியிருக்கும் கூடாரமாக மாறிவரும் புளியங்குடி நகராட்சி அலுவலகம் செய்தியை ளியிடாதீர்கள் என தடுத்த மேலாளரால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் பல வருடங்களாக கோப்புகள் மற்றும் அலுவலகப் பொருட்களை சுத்தம் செய்யாமல் பாதுகாப்பு இல்லாமல் கிடந்துள்ளது அதனால் அதற்கு பாம்புகள் குடியிருந்துள்ளது நேற்று முன்தினம் சில கோப்புகளை நகராட்சி ஊழியர்கள் எடுக்க முயற்சிக்கும் போது அதற்குள் பாம்பு இருப்பதை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் உடனேஅதிகாரிகள் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று நேற்று மதியம் அலுவலகத்தை நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்ய ஆரம்பித்தனர் அப்போது பாம்பு குட்டி உள்ளிருந்து வெளியே வந்தது அதை நகராட்சி ஊழியர்கள் பார்த்து பயந்து ஓட்டம் பிடித்தனர் இச்செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக தீயணைப்பு துறைக்கோ பாம்பு பிடிப்பருக்கோ தகவல் தெரிவிக்காமல் பாம்பை நகராட்சி ஊழியர் நாராயணனை பிடிக்கச் செய்தனர் பாம்பை பிடிக்க அனுபவம் இல்லாத நாராயணன் பாம்பை கையால் பிடித்து தூக்கினார் அதில் பாம்பு இரண்டு தூண்டானது பின்பு இரண்டு துண்டான பாம்பின் உடலை பையில் பிடித்துக் கொண்டு சென்றார் மேலும் பிடிபட்ட பாம்பின் தாய் மற்றும் சில பாம்புகள் உள்ளே இருப்பதால் நகராட்சி நிர்வாகம் சுத்தமில்லாமல் கிடக்கும் நகராட்சி அலுவலகத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். செய்தியை சேகரித்து படம் எடுத்த நமது செய்தியாளரை நகராட்சி மேலாளர் பேச்சிக்குமார் தடுத்து நிறுத்தி செய்தியை வெளியிடக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதனால் அங்கிருந்து நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை கண்டதும் அமைதியாகிவிட்டார் புளியங்குடி நகராட்சி அலுவலகம் சுத்தமில்லாமல் கிடப்பதால் தான் பாம்புகள் குடியிருக்கும் கூடாரமாக மாறி வருகிறது அதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நகராட்சி அலுவலகத்தை சுத்தமாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
Tags :