விமானப் பணிப்பெண் பலாத்காரம்.. காமுகனை தேடும் போலீஸ்

வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த 46 வயது விமானப் பணிப்பெண்ணை மருத்துவமனை ஊழியர் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹரியாணாவின் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தபோது, ஏப்., 6ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் வென்டிலேட்டரில் அரை மயக்கத்தில் இருந்தபோது, ஊழியர் அவரை பலாத்காரம் செய்துள்ளார்.சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Tags :