கம்பியால் தாக்கி மயக்கமடைந்த பெண்னுடன் பாலியல் என்ஜினியர் கைது

by Staff / 17-02-2023 01:05:35pm
கம்பியால் தாக்கி மயக்கமடைந்த பெண்னுடன் பாலியல் என்ஜினியர் கைது

திருவட்டார் அருகே உள்ள மூவாற்றுமுகத்தில் வசிப்பவர் என்ஜினீயரான எட்வின் (28). இவர் டிப்ளமோ என்ஜினீயர் படிப்பை முடித்து, தந்தை இறந்து விட்டதால், தாயாருடன் வசித்து வருகிறார். இவருக்கு பக்கத்து வீட்டு திருமணமான 47 வயது கொண்ட பெண் ஒருவர் மீது ஆசை ஏற்பட்டு, அந்த பெண்ணை அவரது வீட்டு ஜன்னல் வழியாக பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். பின் ஒருநாள் இதை கவனித்து வந்த அந்த பெண், எட்வினின் தாயாரிடம் கூறி கண்டித்துள்ளார்.இதனால் அந்த பெண்ணை எட்வின் பழிவாங்க துடித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் அந்த பெண்ணின் கணவர் வழக்கம் போல் வேலைக்கு சென்ற பின் மதியம் நேரம், அந்த பகுதியில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவுக்கு சென்ற அப்பெண் வீட்டிற்கு வந்து கட்டிலில் படுத்திருந்தார்.

அப்போது எட்வின் இரும்பு கம்பியுடன் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கிய பின், மயக்கமடைந்த அந்த பெண்ணை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து எதுவும் நடக்காதது போல் அவர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின் அந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு சென்று, மனைவி ரத்த காயங்களுடன் அலங்கோலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும் இது குறித்து அந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதில், எட்வின் எதுவும் நடக்காதது போல் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவியுள்ளார்.
ஆனால் எட்வின் நடவடிக்கை மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், நேற்று முன்தினம் மாலையில் ஆற்றூர் கழுவன்திட்டையில் வைத்து அவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட எட்வினை போலீசார் கைது செய்தனர். பின் நடந்த சம்பவத்தை பரபரப்பு வாக்குமூலம் ஒன்றையும் போலீசாரிடம் அளித்துள்ளார். கடந்த 13-ந் தேதி அந்த பெண் தனியாக படுத்திருந்த போது அவளை அடைய வேண்டும் என்ற ஆசையிலும், என்னை அவமானப்படுத்தியதால் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் ஒரு இரும்புக்கம்பியை எடுத்துக்கொண்டு பெண்ணின் வீட்டுக்கு சென்று, அதை வைத்து அடித்து, பின் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அப்பெண் செத்துவிட்டதாக நினைத்து வீட்டை விட்டு வெளியே வந்தேன்.
பின் மறுநாள் வெளியூர் தப்பி செல்ல முடிவு செய்து, பணம் எடுக்க வீட்டிற்கு வரும்போது ஆற்றூர் கழுவன்திட்டை பகுதியில் போலீசாரிடம் மாட்டிக்கொண்டேன் என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட எட்வினை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த பெண்ணுக்கு நினைவு திரும்பாத நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி  உயிரிழப்பு.

 

Tags :

Share via

More stories

Logo