ஸ்பாவில் பெண்ணை மிரட்டிய பாஜக நிர்வாகிகள் 5 பேர் நீக்கம்

by Staff / 05-09-2023 11:25:07am
ஸ்பாவில் பெண்ணை மிரட்டிய பாஜக நிர்வாகிகள் 5 பேர் நீக்கம்

ஸ்பாவில் பெண்ணிடம் பணம்பெற்றுக்கொண்டு மிரட்டியதாகவும், அங்குள்ள பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் எழுந்த புகாரின் பேரில் திருவள்ளூர் பாஜக நிர்வாகிகள் 5 பேரை கட்சியில் இருந்து அண்ணாமலை நீக்கி உள்ளார். சென்னையை அடுத்த மணலி புதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் அம்பத்தூரில் ‘ஸ்பா’ நடத்தி வருகிறார். அந்த ‘ஸ்பா’வுக்கு உரிமம்வாங்கித் தருவதாக பணம் வாங்கிக்கொண்டு அந்தப் பெண்ணை மிரட்டுவதாகவும், ‘ஸ்பாவில்’ பணிபுரியும் பெண்களிடம் தவறாகநடந்து கொண்டதாகவும் திருவள்ளூர் மாவட்ட மூத்த பாஜக நிர்வாகிகள் மீது புகார் எழுந்தது. மேலும், இது தொடர்பான ஆடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தவிவகாரத்தில் 2 பேர் நிரந்தரமாகவும், 3 பேர் தற்காலிகமாகவும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories