மதுரையில் 107 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு - 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்.

by Editor / 24-09-2024 10:18:42am
மதுரையில் 107 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு - 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்.

மதுரை மாவட்டத்தில் கடந்த 10நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனிடையே 3 சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள டெங்கு சிறப்பு வார்டில் அனுமதி -  டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 20 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு தயார்நிலையில் உள்ளது.

அங்கு அவர்களுக்கு 24 மணிநேர மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர்  குணமடைந்துள்ளார்

டெங்கு பாதிக்கப்பட்ட 2 பேரின் உடல் நிலையும் சீராக உள்ளதாகவும்,  தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல்தெரிவித்துள்ளது.

இதனிடையே பருவநிலை மாற்றத்தால்  ஒரே வாரத்தில் மட்டும் 107 பேர் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 29 சிறுவர்கள், 30 பெரியவர்களும் சிகிச்சை என 59 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சையும் பெற்றுவருகின்றனர். 

மேலும் 48 பேர் வெளிநோயாளிகளாக கண்டறியப்பட்டு வீடுகளில் தங்கி சிகிச்சைபெற்றுவருகின்றனர்.மேலும் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் கொளுத்தும் வெயிலால் பருவநிலை மாற்றத்தால் சிறுவர்களுக்கு  காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது.

 

Tags : மதுரையில் 107 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு - 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்.

Share via