“பிழைகள் நிறைந்தது விஜய்யின் அரசியல்" - ஆளூர் ஷா நவாஸ்

விஜய் அரசியல் குறித்து ஆளூர் ஷா நவாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “அரசியல் செய்வதற்கான மக்கள் பிரச்னைகளை எல்லாம் தவற விட்டுவிட்டார் விஜய். பரந்தூருக்குப் போனபோதாவது மக்களைச் சந்தித்தாரா? ஒரு பிரஸ் மீட் நடத்தியாவது மக்கள் பிரச்னையைப் பேசியிருக்கிறாரா? ஓராண்டை வீணடித்த விஜய், இனிமேல் களத்துக்கு வந்து பிரச்னைகளைக் கையிலெடுத்து, 2026ஆம் ஆண்டு தங்களுக்கான தளம் அமைப்பதற்கு எல்லாம் டைம் இல்லை. பிழைகள் நிறைந்த விஜய்யின் அரசியல், என்ன தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்?” என்றார்.
Tags :