3.160 கிலோ கஞ்சா பறிமுதல்! மூவர் கைது

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த சரத்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். அதன்போது அவரது கூட்டாளிகளான கோகுல் மற்றும் ஒரிசா மாநிலத்தை சோ்ந்த சக்திகுமார் ஆகிய இருவர் குறித்தும் தகவல் கிடைத்த நிலையில் இறால் பண்ணையில் வைத்து அவர்களும் கைது செய்யப்பட்டு வழக்கு போடப்பட்டது. கைதானவர்களிடம் இருந்து 3.160 கிலோ கஞ்சாவை காவல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Tags :