தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்பில் அக்கறை பிரதமருக்கு நன்றி” – நயினார் நாகேந்திரன்!

by Editor / 05-05-2025 09:39:00am
தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்பில் அக்கறை பிரதமருக்கு நன்றி” – நயினார்  நாகேந்திரன்!

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை அரசிடமிருந்து விடுவித்து அவர்களை விமானம் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வந்த நமது மத்திய அரசின் சீரிய முயற்சிகளை மனதார வாழ்த்துகிறேன்.


இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை மூன்று மாதங்களில் மீட்டு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் துரிதப்படுத்திய நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் தமிழ்நாடு பாஜக சார்பாகவும் தமிழக மீனவர்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை அரசிடமிருந்து விடுவித்து அவர்களை விமானம் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வந்த நமது மத்திய அரசின் சீரிய முயற்சிகளை மனதார வாழ்த்துகிறேன்.

இலங்கைக் கடற்படையினரால் கைது…

— Nainar Nagenthiran (@NainarBJP) May 5, 2025

கடந்த 11-ஆண்டு கால பாஜக ஆட்சியில் தொடர்ந்து தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தி வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மற்றுமொரு முறை எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்பில் அக்கறை பிரதமருக்கு நன்றி” – நயினார் நாகேந்திரன்!

Share via