காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில் முதலமைச்சா்மு.க.ஸ்டாலின்..

by Admin / 03-03-2023 11:44:20am
காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில் முதலமைச்சா்மு.க.ஸ்டாலின்..

தலைமைச்செயலகத்தில் இன்று தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில் நிகழ்த்தி வருகிறாா். தமிழ்நாடு  முதலமைச்சா்மு.க.ஸ்டாலின்.முதலமைச்சரை தலைவராகக்கொண்ட இந்த நிர்வாகக்குழு 2021 அக்டோபரில் அமைக்கப்பட்டது இதில் மான்டேக்சிங் அலுவாலியா,செளமியா சாமிநாதன்,எரிக் எஸ்.சோல்ஹிம்,நிர்மலா ராஜன் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்
பெற்றுள்ளனர்.இக்குழு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த செயல்பாடுகள்,திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கும்காற்று. மாசு,,நெகிழியால் விளையும் தீமைகள்,காடுகளைப்பாதுகாப்பது,தொழிற்சாலை மாசுக்கள் குறித்த விசயங்களை ,கழிவுநீர் குடிநீரோடு கலப்பதை தடுப்பது என இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான வழிகளை ஆராய்ந்து அவைகளை தடுப்பதற்கான ஆலோசனையை நல்கும்.இக்கூட்டத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி,தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo