கோவையில்கா ருக்குள் புகுந்த இரும்பு கம்பிகள்..

by Editor / 19-09-2021 05:22:32pm
 கோவையில்கா ருக்குள் புகுந்த இரும்பு கம்பிகள்..

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடத்தில் இருந்து சுந்தராபுரம் நோக்கி கார் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த காரை பாட்டு ஆசிரியரான வினோத் ராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவரது மனைவி லீலா, மகன் பிராயன், மகள் ரெக்ஸின் போன்றோர் அந்த காரில் இருந்தனர். இந்நிலையில் இவர்களது கார் கரும்புக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த சரக்கு வேன் டிரைவர் வேகமாக வந்து பிரேக் போட்டுள்ளார். இதனால் வேனில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் முன்னால் சென்ற காரின் பின்பகுதியில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துவிட்டது.

இந்த விபத்தில் வினோத் ராஜுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மற்ற 3 பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பி விட்டனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேன் டிரைவரான ஜெயசந்திரன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo