கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம்- மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

by Admin / 26-07-2021 06:11:28pm
கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம்- மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை



கோவளம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கீழ மணக்குடி, மணக்குடி உள்பட பல கடற்கரைக் கிராமங்களிலும் கடல் சீற்றம் காணப்பட்டது. இங்கும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் இருந்தே கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் சுமார் 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோ‌ஷமாக வீசின. அவை பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்குச் செல்ல தயங்கினர்.

கடல் கொந்தளிப்பினால் கட்டுமரம் மற்றும் வள்ளம் போன்ற சிறு மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கோவளம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கீழ மணக்குடி, மணக்குடி உள்பட பல கடற்கரைக் கிராமங்களிலும் கடல் சீற்றம் காணப்பட்டது. இங்கும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.

கடலுக்கு சென்ற மீனவர்களும் கடல் சீற்றம் காரணமாக கரைக்கு திரும்பி வந்தனர். இதனால் மீன் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. இன்று அதிகாலையில் இருந்தே கன்னியாகுமரியில் மேகமூட்டமாக இருந்ததால் சூரியன் உதயமாகும் காட்சி தெரியவில்லை.

இன்று கன்னியாகுமரிக்கு அதிகாலையில் சூரிய உதயம் பார்க்க கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மழையினால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

 

 

Tags :

Share via