40 பேரை ஏமாற்றி கோடிகளில் புரண்ட ஈரோடு கனகா

by Staff / 15-02-2025 01:46:11pm
40 பேரை ஏமாற்றி கோடிகளில் புரண்ட ஈரோடு கனகா

ஈரோடு கொங்கம்பாளையத்தைச் சேர்ந்த அழகர்சாமியும், அவரது மகள் கனகாவும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். பணம் செலுத்தியவர்களுக்கு பணம் கொடுக்காமல் சுமார் ரூ.1 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் கனகாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அழகர்சாமியை தேடி வருகின்றனர். ஏலச்சீட்டில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பல லட்ச ரூபாய் இழந்துள்ளனர். அழகர்சாமியும், கனகாவும் அங்கீகாரம் இல்லாத ஏலச்சீட்டு நடத்தி பாலு என்பவரிடம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம்  மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

 

Tags :

Share via