குழந்தைகள் உயிரிழப்புகளுடன் தொடர்புடைய இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்

by Staff / 13-10-2022 12:03:36pm
குழந்தைகள்  உயிரிழப்புகளுடன் தொடர்புடைய இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்

காம்பியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளுடன் தொடர்புடைய மருந்து தொழிற்சாலையில் உற்பத்தியை இந்தியா நிறுத்தியுள்ளது.மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 69 குழந்தைகளின் மரணம் தொடர்பாக விசாரணையில் உள்ள மருந்து தொழிற்சாலையில் உற்பத்தியை இந்திய அதிகாரிகள் புதன்கிழமை நிறுத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வட மாநிலமான ஹரியானாவில் மைடன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரிக்கும் நான்கு இருமல் மற்றும் சளி மருந்துகளால் கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் எச்சரித்தது.ஹரியானா மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் புதன்கிழமை செய்தி நிறுவனமான பிடிஐக்கு அளித்த பேட்டியில், இந்த மருந்து தொழிற்சாலையில் அனைத்து மருந்து உற்பத்தியையும் உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்.

தலைநகர் டெல்லியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குண்ட்லி நகரில் உள்ள மெய்டன் நிறுவனத்தில் 12 விதிமீறல்கள் முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டதாக அமைச்சர் கூறினார். மைடன் பார்மாசூட்டிகல்ஸ் இயக்குனர் நரேஷ் கோயல், தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பதை மறுத்துள்ளார். "இறப்புக்கள் பாராசிட்டமால் சிரப் காரணமாக நிகழ்ந்தன, எங்கள் இருமல் சிரப்களால் அல்ல" என்று கூறினார்.

 

Tags :

Share via