முன் ஜென்ம பாவம் போக்கும் திருவெண்காடுஅகோரமூர்த்தி.

by Editor / 07-10-2024 10:10:50am
முன் ஜென்ம பாவம் போக்கும் திருவெண்காடுஅகோரமூர்த்தி.

சோழ தேசத்தில் நவக்கிரகங்களுக்கும் கோயில்கள் இருக்கின்றன. நவக்கிரகங்களில் புதன் பகவானும் ஒருவர். புதன் பகவான் குடிகொண்டிருக்கும் நவக்கிரக பரிகார தலமாக போற்றப்படுகிறது திருவெண்காடு.சீர்காழிக்கு அருகில் உள்ள திருத்தலம். பூம்புகாருக்கு அருகில் உள்ள திருத்தலம். வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகில் உள்ள திருத்தலம். இந்தத் தலத்தில்,சிவபெருமானின்திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர்.மிகபிரமாண்டமான சிவனாரின்  இந்தத் தலத்தில், அகோரமூர்த்தியின்  சந்நிதி அமைந்துள்ளது  இத் திருத்தலத்தின் விசேஷம்.  அகோரமூர்த்தியின் சந்நிதி, தமிழகக் கோயில்களில் அரிதாக இருப்பதாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். திருவெண்காட்டில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்த மூன்று தீர்த்தங்களிலும் நீராடி, அருகில் உள்ள பிள்ளை இடுக்கியம்மனை வணங்கி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.  அதேபோல் சிவனாருக்கும் அம்பாளுக்கும் புதன் பகவானுக்கும் முறையே பூஜைகள் செய்து வேண்டிக்கொண்டாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம்.

திங்கள், புதன், ஞாயிறு முதலான கிழமைகளில் இங்கே வந்து புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். குபேர யோகத்தைப் பெறலாம். திருமண பாக்கியம் கைகூடும். சகல ஐஸ்வர்யங்களும் பெற்றும் செல்வமும் செழிப்புமாக வாழலாம். கலைத்துறைகளில் மேன்மை பெறலாம் என்கிறது ஸ்தல புராணம். அகோரமூர்த்தியின் சந்நிதியில் உங்கள் குறைகளை அவரிடம் சொல்லி மனதார வழிபட்டால், பித்ருக்கள் முதலான தோஷங்கள் விலகும்.  முன்னோர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கப் பெறலாம். 

எதிரிகள் பலமிழப்பார்கள். எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். மனக்கசப்புகளும் மனக்கிலேசமும் நீங்கும். இங்கே உள்ள நடராஜர் சந்நிதியும் வெகு அற்புதமாக அமைந்துள்ளது. சிதம்பரம் தலத்து நடராஜர் சந்நிதி போலவே இங்கேயும் அமைந்திருக்கிறது. நவக்கிரக திருத்தலங்களில் இது புதன் பரிகாரத் தலம். பலரும் நேராக கோயிலுக்குள் நுழைந்து புதன் சந்நிதிக்குச் சென் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், இது தவறு என்கிறார்கள் ஆச்சார்யர்கள். முதல் சிவனாரை வழிபடவேண்டும். பின்னர் அம்பாளை வணங்க வேண்டும். அதன் பின்னரே புதன் பகவானை வணங்கி வழிபட வேண்டும் என்பதே மரபு, ஐதீகம்.இந்த திருவெண்காடு திருத்தலத்தின் அகோர மூர்த்தி ரொம்பவே விசேஷமான மூர்த்தம். இவரை ஆத்மார்த்தமாக வணங்கி வழிபட்டு வந்தால், துஷ்ட குணங்களும் எண்ணங்களும் ஏற்படாது. நல்ல தர்ம சிந்தனைகள் பெருகும். முன் ஜென்ம வினைகள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.திருவெண்காடு தலத்தின் தனிச்சிறப்பு அகோரசிவன் மூர்த்தியாவர். சிவபெருமானின் பஞ்சப்பிரம மூர்த்தங்களுள் தென்முகமாக இருப்பது அகோரமூர்த்தியாவர். சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களுள் அகோர மூர்த்தி 43-வது மூர்த்தியாவார். இத்திருவுருவம் இத்தலத்தில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய அகோர மூர்த்தியை காண இயலாது.இப்பெரிய கோயிலின் மேலை பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியாக தன் அருள் மாட்சியைத் துலங்க வைத்துக் கொண்டிருக்கிறார் அகோர சிவம்.திருவெண்காடு தலத்தின் தனிச்சிறப்பு அகோரசிவன் மூர்த்தியாவர். சிவபெருமானின் பஞ்சப்பிரம மூர்த்தங்களுள் தென்முகமாக இருப்பது அகோரமூர்த்தியாவர். சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களுள் அகோர மூர்த்தி 43-வது மூர்த்தியாவார்.இத்திருவுருவம் இத்தலத்தில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய அகோர மூர்த்தியை காண இயலாது.இப்பெரிய கோயிலின் மேலை பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியாக தன் அருள் மாட்சியைத் துலங்க வைத்துக் கொண்டிருக்கிறார் அகோர சிவம்.இவரை அடுத்துள்ள சன்னதியில் இப்பெருமானது உற்சவ படிமத்தைக் காணலாம். பக்தர்களைக் காக்க இதோ புறப்பட்டு விட்டேன்! என்று கூறுவார் போன்றும் - அருள் சிறக்க ஓடி வருவார் போன்றும் அமைந்துள்ளது. பெருமானின் முன்காலும், இடது காலும், உருவத்தில் கொஞ்சம் கடுமை காட்டுகிறார் தான் என்றாலும், அருட்கண்ணோட்டத்தில் இவரே சிறந்த வரப்பிரசாதி.அகோர மூர்த்தியின் திருவுருவைக் காணக்கண்கோடி வேண்டும். இவர் கரிய திருமேனி உடையவர். இவர் இடது காலை முன்வைத்து வலது கால் காட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி நடக்கிற கோலத்தில் உள்ளார்.எட்டுக்கரங்களும் ஏழு ஆயுதங்களும் உடைய வீரக்கோலம் பூண்டுள்ளார். கைகளில் வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், கேடயம், மணி, திரிசூலம் ஆகிய ஆயுதங்களை தாங்கியுள்ளார்.சிவந்த ஆடைகளை அணிந்தும், தீப்பிழம்பு போன்ற எரிசிகைகளுடன் நெற்றிக்கண் நெருப்பைக்கக்க கோரைப்பற்களுடன், பதினான்கு நாகங்கள் திருமேனியில் பூண்டு மணிமாலை அணி செய்யக் கம்பீரமாகக் காட்சி தருகிறார். 

அப்பர் சுவாமிகள் இத்தலத்தைப் பற்றிப் பாடிய “தூண்டு சுடர் மேனி” எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தில் சொல்லப்பட்டவை 
அனைத்தும் அகோரமூர்த்தியின் திருவுருவத்தில் காணலாம்.இருபத்தெட்டு ஆகமங்களில் உத்தர காரண ஆகமத்தில் இவரை அகோராஸ்திர மூர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தட்ச யாகத்தை அழிக்க சிவபெருமானால் நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட அகோர வீரபத்திரர் வேறு. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அகோரமூர்த்தி வேறு ஆவார். இரு அம்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தை வாசகர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.அகோரமூர்த்தி எப்படி உருவானார் என்ற வரலாறு வருமாறு:-

மருத்துவாசுரன் என்னும் அசுரன் பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தால் தேவர்களுக்கு பல துன்பம் விளைத்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் திருவெண்காட்டில் வேற்றுருவில் வாழ்ந்து வந்தனர்.அசுரன் வெண்காட்டிற்கும் வந்து போர் செய்ய, வெண்காட்டீசர் முதலில் நந்தியை ஏவினார். அசுரன் நந்தியிடம் தோற்றுப்பின் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, சூலாயுதத்தை வேண்டிப் பெற்று மீண்டும் போருக்கு வந்து நந்தியை சூலத்தால் தாக்கி காயங்களை ஏற்படுத்தினார்.இதுபற்றி நந்தி, திருவெண்காடரிடம் முறையிட, அவர் கோபம் கொண்டார். அப்போது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றாகிய அகோர முகத்தினின்று அகோரமூர்த்தி தோன்றினார். அகோர உருவைக் கண்டமாத்திரத்திலேயே மருத்துவாசுரன் சரணாகதி அடைந்து தோத்திரம் செய்தான்.சரணடைந்த மருத்துவாசுரனை அகோரமூர்த்தியின் காலடி யில் இன்றும் காணலாம்.காயம் பட்ட இடபதேவரை சுவேதாரண்யே சுவரர் ஆட்கொண்டார். இன்றும் இக்கோவிலின் நிருத்த மண்டபத்தில் சிலை வடிவில் இதை காணலாம்.மாசி மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை திதி, பூர நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12.00 மணிக்கு அகோரமூர்த்தி தோன்றினார். இதே காலத்தில் ஆண்டுதோறும் அகோரமூர்த்தி மருத்துவாசுரனை அடக்கும் ஐந்தாம் திருவிழாவாக இங்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவிலும் அகோரபூஜை நடைபெற்று வருகின்றது. கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் மிக விசேஷமாக பூஜை நடைபெறுகின்றது.அகோர சிவமாம் அண்ணலின் சன்னதிக்கு எதிரே அமைந்த சன்னதி ஒன்றில் சுவேதமகாகாளி அழகெல்லாம் திரண்டு வீரக்கோலத்தில் அருட்பொலிவோடு ஐயனுக்கு ஏற்ற அம்மையாக வீற்றிருப்பதையும் காணலாம்.ஸ்ரீ அகோர மூர்த்தி மூல மந்திரம் மற்றும் தியானம் சுலோகம்:

அகோரமூர்த்தி ஸ்லோகம்.

அகோரப்யோத கோரப்யோ 
கோர கோர தரேப்ய:ஸர்வேப்ய!
ஸர்வ சர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ர ரூபேப்யோ!!!

ஸ்ரீஅகோரமூர்த்தி மூலமந்திரம்..

"ஓம் ஹ்ரீம் ஸ்புர ஸ்புர
 ப்ரஸ்புர ப்ரஸ்புர, கோர கோர தநுரூப தநுரூப சடசடப்ரசட ப்ரசட கஹ கஹ வம் வம் பந்த பந்த காதய காதய ஹூம் பட் நம:"

ஸ்ரீ அகோர மூர்த்தி தியானம்.

"ஜைல கன ஸமாபம் பீம தம்ஷ்ட்ரம்
த்ரிநேத்ரம புஜகதரம் கோரம்
ரக்தவஸ்த்ராங்க தாரம் பரசுடமரு கட்கம் 
கேடகம் பாணச்சாயை த்ரிசிக நரகபாலை 
விப்ரதாம் பாவயாமி!"

இந்த மந்திரத்தை தவறாக பயன்படித்தினால் விளைவுகள் விபரீதத்தை ஏற்படுத்தி விடும் .

ஸ்ரீஅகோர மூர்த்தி
மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் . 

இவர் மூல மந்திரம் சகல பாவங்களையும் போக்கும். சகல விதமான செய்வினை கோளாறுகள் , கண் திருஷ்டி தோஷங்கள் , ஏவல் வேலைகள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டது.இவர் வழிபாடு சகல விதமான தடைகளையும் நிவர்த்தி செய்யும் .பலா  மர  ஆசனத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஸ்ரீஅகோர மூர்த்தியை தியானித்து தினமும் உஷா கால வேளையில் 108 முறை மந்திரத்தை ஜெபித்தால் சகல பாவ  விமோக்ஷனம் நிச்சயம் .

 

Tags :

Share via